அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான அறிவித்தல்

அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுபவர்களுக்கு விசேட ஒரு நாள் சேவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தகையவர்கள், வாட்ஸ்அப் மூலம் தங்கள் ஆவணங்களை 070 631 1711 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் சேவைக்கான அனுமதியை பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே பதிவை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இன்று புதன்கிழமை முதல் கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வருகை தரும் போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் முன்பதிவு பெறுவது கட்டாயமாகும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.