
கன்னி வெடி வெடித்ததில் இளைஞன் ஒருவரின் கை தூண்டானது
-கிளிநொச்சி நிருபர்-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னி வெடி வெடித்ததில் இளைஞன் ஒருவரின் கை துண்டானது.
பளை பிரதேச இந்திராபுரம் பகுதியில் மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பிரிவில் பணிபுரியும் இளைஞன் கடமையில் இருந்த போது, மதிய உணவு உண்டு விட்டு கன்னிவெடி ஒன்றினை வைத்து தட்டிய வேளையே வெடித்துள்ளது.
காயமடைந்து கை துண்டான நிலையில் இளைஞன் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பளை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
