
3,800 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது
3,800 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் வி.கேதேஸ்வரம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை மாதம் நிறைவடைவதற்குள் இன்னும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்தபின் இதுவரை சுமார் 4 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
