தாய் நாட்டிற்காக எப்போதும் பாடுபடுவேன் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
கடந்த காலங்களில் தாம் நாட்டுக்காக மேற்கொண்ட பணிகளைப் போன்று எதிர்காலத்திலும் நாட்டுக்காக பாடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவினால் வாசிக்கப்பட்டது.
குறித்த கடிதத்தில் மேலும்
அதில் 2019 நவம்பர் 18ஆம் திகதி இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நான் பதவிக்கு வந்த மூன்று மாத காலத்திலேயே கொரோனா பரவல் நாட்டை பாதித்தது.
இதன் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்படைந்தது.
எனினும் அந்த கொரோனா தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த வகையில் நாட்டை முன்கொண்டு செல்ல சர்வ கட்சிகள் அடங்கிய அரசாங்கமொன்றை அமைத்து முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
நான் கடந்த காலங்களில் தாய் நாட்டுக்காக செய்த சேவை போன்று எதிர்காலத்திலும் தாய் நாட்டுக்காக சேவை செய்வதில் விருப்பம் கொண்டுள்ளேன், என கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
