தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கோட்டாபய ராஜபக்ஷ ஜீலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நாட்டிலிருந்து தப்பி மாலைத்தீவிற்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பில் சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை வெளியிடவில்லை.