பசில் ராஜபக்சவிற்கு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் எதிர்ப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழியை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறினார்.
