கொழும்பில் துப்பாக்கி சூடு : ஒருவர் படுகாயம்
இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு – புதுசெட்டித்தெரு, சங்மித்தா மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 29 வயதான நபரொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
