
அலரிமாளிகையில் மோதல் : பலர் படுகாயம்
அலரிமாளிகையில் ஜே.வி.பி ஆதரவாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒன்பது ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.
இதில் இருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவரின் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுகாயமும் ஏற்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
