ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு ஒப்படைத்தார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை, ஜூலை 13 திகதியிட்ட தனது இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிரேஸ்ட அதிகாரி அதை சபாநாயகரிடம் கையளிப்பார் என்றும், நாளை புதன்கிழமை சபாநாயகர் இது தொடர்பாக பகிரங்க அறிவிப்பை வெளியிடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் தொடர்ந்தும் படையினரின் பாதுகாகாப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் சபாநாயகர் குறித்த செய்தியை தான் தவறுதலாக கூறியதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
