இன்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்

இன்று செவ்வாய்க்கிழமை சந்தைக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாளை புதன்கிழமை முதல் ஏனைய இடங்களுக்கு எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.