விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு

-நுவரெலியா நிருபர்-

புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புஸல்லாவ புரட்டொப் தோட்டத்தில் இருந்து பயணித்த பஸ் இடையில் பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியதால் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த பஸ் புரட்டொப் தோட்டத்திலிருந்து புஸல்லாவ நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இடையில் காச்சாமலை -வீடன் பகுதியில் வைத்து மண்மேட்டில் சாய்ந்ததால் பஸ்ஸில் பயணித்த இரு பயணிகள் சம்பவமிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் அவ்விடத்திலேயே பேருந்திற்கு தீ வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில்  காச்சாமலை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கவிஷான் (19 வயது) என்பவரும், மூன்று பிள்ளைகளின் தந்தையான புஸ்பகுமார (39 வயது) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வகுகப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.