லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 4,910 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
