தாம் பதவி விலகுவதை உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
முன்னதாக அறிவித்தப்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தாம் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, நாளை மறுதினம் புதன்கிழமை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகுவதாக சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
