அனைத்துக் கட்சி தலைவர்களின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி சம்மதம்?
அனைத்துக் கட்சித் தலைவர்களின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக சம்மதித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பிரதமரால் கூட்டப்படும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
