அமைச்சு பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார் பந்துல குணவர்தன
போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பதவிகளிலிருந்து தான் விலகியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும் விலகியுள்ளதாகவும், தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் தான் சுயாதீன உறுப்பினராக இயங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
