
கல்முனையில் கோட்டா கோ ஹோம் போராட்டம்
-கல்முனை நிருபர்-
மாளிகைக்காடு சந்தியில் இருந்து கல்முனை நகர் வரையிலான கோட்டா கோ ஹோம் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த போராட்டத்தில் துவிச்சக்கர பேரணியும் நடைபெற்றது.
இதே போன்று ஐக்கிய மக்கள் சக்தி கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றசாக் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கல்முனை தொகுதி ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று சாய்ந்தமருது முடிவில் இருந்து ஆம்பித்து கல்முனை வரை நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமருக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


