மறு அறிவித்தல் வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு
இன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களை சில்லறை விற்பனை செய்ய உரிமம் பெற்ற அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
