மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை : மனைவி பிள்ளைகள் கைது

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக கும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மகன் (வயது 17) உட்பட 6 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 3 பெண்களும் அடங்குவர்.

சந்திவெளி பாலையடித்தோனாவைச் சேர்ந்த க.இளையராஜா (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினமான நேற்ற முன்தினம் புதன்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக மனைவியின் உறவினர்கள் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டியதையடுத்து, அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு குற்றத் தடுப்பு தடவியல் பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.