300 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை 300 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் டீசல் பதுக்கி வைத்திருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.