ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்பொழுது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.