
சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது : ஆறு சைக்கிள்கள் மீட்பு
யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்களை யாழ்ப்பாண பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
