ஒரு கிலோ அரிசி 140 ரூபா
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை என்பன உரிய தலையீடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
குறிப்பாக சமுர்த்தி நிவாரணத்தை பெறும் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
