எரிவாயு கப்பல் வர மேலும் 3 நாட்கள் தாமதமாகும்

நாளை புதன்கிழமை நாட்டிற்கு வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிய கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாக எதிர்வரும் 9 ஆந் திகதி நாட்டை வந்தடையும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

அதற்கமைய, எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.