
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வாரத்தை பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
