
லாப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
லாப் எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீண்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாகவும், இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் 1345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
