இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய் : 5 வயது மகள் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், 32 வயதான தாயும், 11 வயதான மகனும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.