
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வீசா காலத்தை நீடிப்பதற்கான வேலைத்திட்டம்
இலங்கையிலுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு வருட வீசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து வருடங்களாக நீடிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வீசா தொடர்பான முதலாவது சான்றிதழ் லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தாவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
