
தமிழ் பொலிஸாருக்கு சிங்கள வகுப்பு
-யாழ் நிருபர்-
இலங்கையில் முதன் முறையாக தமிழ் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து பெளத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ் இராமச்சந்திரனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரின் அனுமதியுடன் குறித்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு முதற்கட்டமாக சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் சிங்கள பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கையை இந்து பௌத்த கலாசார பேரவை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
