வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர வெளியிட்டுள்ள தகவல்

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கட்டார் நாட்டின் வலுசக்தி அமைச்சரும், கட்டார் பெற்றோலிய நிறுவனத்தின் தலைவருமான ஷெரிடால் அல் காபியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் அமைச்சர் நஸீட் அகமட் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கட்டாருக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்

இந்நிலையில், இலங்கைக்கு எரிபொருள் மற்றும் பெற்றோலிய பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பிலும், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக, அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.