
நாட்டில் இருந்திருந்தால் டொலராவது மிஞ்சியிருக்கும் – விமல் வீரவன்ச
எரிபொருள் தேடி அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர், ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றும் பயனில்லை, வெளிநாடுகளிலிருத்து எரிபொருளை பெறுவது சாத்தியமல்ல, என தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்திருந்தால், அந்த டொலர்களாவது மிச்சமாக இருக்கும்
அதுமட்டுமன்றி, இங்கிலாந்து சென்ற அமைச்சர் ஒருவர் உயர் வசதிகளுடைய விடுதியில் தங்கியிருக்கிறார்
நாட்டின் இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த செலவிலான விடுதி ஒன்றில் அல்லது தூதுவரின் இல்லத்தில் தங்கியிருக்கலாம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ரஷ்யாவிற்கும், வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் சுற்று சூழல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் காட்டருக்கும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
