அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை நேற்று திங்கட்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்புக்கு மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 5 பேர் உட்பட 34 ஆண்களும், 6 பெண்களும், 7 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



