நாட்டு நிலமை தொடர்பில் கலந்துரையாட வெளிநாடுகளுக்கு விரைந்துள்ள அமைச்சர்கள்

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டார் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு டோகா நோக்கி பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.