பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு : கிராம சேவகர்கள் பணி புறக்கணிப்பு

-கிளிநொச்சி நிருபர்-

பெற்றோல்ல் வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம் சேவர்களும் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கிராமசேவையாளர்களுக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்ட கொண்டிருக்கின்ற நிலையிலும், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களுக்கு மட்டும் எரிபொருள் இதுவரை வழங்கப்படாத நிலையிலேயே அவர்கள் இன்று சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம சேவையாளர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக எரிபொருள் வழங்க வேண்டும் என சுற்றுநிறுபம் மூலம் அனைத்து பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், இதுவரை அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பவில்லை.

இதேவேளை, பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கூட பிரதேச செயலர்கள் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், தமது பிரச்சனைகளை முன்னிறுத்தி வடமராட்சி வடக்கு பிரதேச செயலருக்கு கிராம சேவகர்கள் அனைவரும் ஒப்பமிட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

தங்களுக்கு தொடர்ந்தும் எரிபொருள் வழங்குவதில் புறக்கணிப்பு இடம் பெற்றால் தாம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம சேவகர்கள் தெரிவிக்கின்றனர்.