வைத்தியர் என தெரிவித்து பல இளைஞர்களிடம் பண மோசடி செய்த பெண்

பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார வைத்தியராகக் காட்டிக் கொள்ளும் இலங்கைப் பெண் ஒருவர் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர்களுடன் முதலில் நட்பை ஏற்படுத்தி பேஸ்புக் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் தனக்கு பல தொழில்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண் அதில் முதலீடு செய்து தொழிலில் ஈடுபடுமாறும் இளைஞர்களை வலியுறுத்தியுள்ளார்.

குறித்தபெண்ணின் வார்த்தையில் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு அவ்வப்போது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டும், இடம் விட்டு இடம் பெயர்ந்தும் திரியும் பெண், அண்மையில் கடவத்தையில் தங்கியிருந்த சமயம் அவர் மோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த பெண் கடவத்தை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.