
மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் 54 பேர் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர்களை திருகோணமலை – துறைமுகத்திற்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
