கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.