மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 470 ரூபா.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபா.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து. புதிய விலை 460 ரூபா.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து. புதிய விலை 520 ரூபாவாக விலைகள் அதிகரித்துள்ளது.

இதேவேளை. லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.