பொம்மையுடன் திருமணம் : பொம்மை கணவருடன் குழந்தை பெற்ற பெண்

பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றுள்ளார்.

அவரது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் என்ற பொம்மையை அப்பெண் திருமணம் செய்துக் கொண்டார்.

தனது கணவரின் வருகை தான் வாழ்க்கையை முழுமையடையச் செய்ததாக அவர் தெரிவிக்கிறார்.

தன் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாகவும், காதல் என்பது மிக அழகான உணர்வு என்றும் இந்த 37 வயது பெண், பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

இந்த ஜோடிக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மார்செலோ என்ற பொம்மையை அவரது தாயார் அறிமுகப்படுத்தினார், அந்தப் பெண்ணுக்கு நடனமாடுவதற்கு ஜோடி இல்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட ஆண்  பொம்மை அது.

அந்த பொம்மையை திருமணம் செய்து கொண்ட மோரேஸ் தனது கணவர் ஒருபோதும் சண்டையிடுவதில்லை என்றும், தன்னை புரிந்துகொள்வதால் தான் எப்போதும் விரும்பும் மனிதனாக தனது கணவர் இருப்பதாக மோரேஸ் தெரிவிக்கிறார்.

மார்செலோ ஒரு சிறந்த மற்றும் உண்மையுள்ள கணவர். எல்லா பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அவர் ஒரு மனிதர் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

தங்கள் திருமணம் தொடங்கியது சென்றது முதல் இறுதி வரைமிகவும் அழகாக இருந்தது. பின்னர் எனது கணவர் மார்செலோவுடன் திருமண இரவுக்குச் சென்றோம், நாங்கள் எங்கள் திருமண இரவை மிகவும் ரசித்தோம் என்று மோரேஸ் தெரிவிக்கிறார்.

தனது குழந்தையின் வரவை சுமார் 200 பேருடன் கொண்டாடிய மோரேஸ் அந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பினார்.