5 நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் தனது வாகனத்திலேயே உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

களுத்துறை மாவட்டம் அங்குருவாதோட்டை, படகொடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த டிப்பர் சாரதியான 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 5 நாட்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது