பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்

பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று வியாழக்கிழமை குறித்த கப்பல் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது நாளையே குறித்த கப்பல் நாட்டை வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் முதல் வழமைப் போல பெற்றோலை விநியோகிக்க முடியும் என இலங்கை கனிய எண்ணெய் தனியார் ஊர்தி தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.