வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு படுகாயம்

-பதுளை நிருபர்-

பண்டாரவளையில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில், பசறை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர்,  மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

எக்கிரிய பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளார்.

பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவர், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த முச்சக்கரவண்டி சாரதி பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.