நாளை மறுதினம் பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பும்
பெற்றோல் கப்பல் ஒன்று நாளை வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும், என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
