மெனிங் சந்தையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு
பேலியகொடை-மெனிங் சந்தையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
