ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மே 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால்  காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்னால் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டு, அவரை கைது செய்வதற்கான உத்தரவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

அதனையடுத்து, அவர் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவின் அடிப்படையில் அவரை நீதிமன்றில் சரணடைய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவருக்கு அன்றைய தினமே பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.