
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறி பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம்
-பதுளை நிருபர்-
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறி இன்று திங்கட்கிழமை பதுளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டமானது, பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு நடைபவணியாக வந்து பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பதுளை-கொழும்பு பிரதான வீதியிலும், பதுளை-பசறை வீதியிலும் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

