26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் மன்னாரை சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.