முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் படுகாயம்
-முல்லைத்தீவு நிருபர்-
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்றுமுன் இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது
சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினருடன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் அது கைகலப்பாக மாறிய வேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
