
கரடி தாக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி
-கிளிநொச்சி நிருபர்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் விறகுவெட்ட சென்றவர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விறகு வெட்ட சென்றவரை இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த சிவபாலகிருஸ்ணன் (38 வயது) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் முகத்தில் பலத்த காலங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சையின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம், கொக்காவில் பகுதியில் உள்ள பெண் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
