இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை இல்லை

இவ்வருடத்திற்கான ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை காலத்தில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு இணையம் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.