
பிரகீத் எக்னலிகொட வழக்கில் 9 இராணுவ அதிகாரிகளும் பிணையில் விடுதலை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த வழக்கின் சாட்சியாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
